ads
குரங்கிலிருந்து மனிதன் உருவாகவில்லை டார்வின் கோட்பாடு தவறு
வேலுசாமி (Author) Published Date : Jan 22, 2018 18:24 ISTஇந்தியா
டார்வின் பரிணாம கோட்பாட்டின்படி குரங்கிலுருந்துதான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான் என்று நம்பி ஒவ்வொரு மனிதரும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இதை உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகில் முதல் மனித இனம் தென் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறப்படுகிறது. கற்கால மனிதர்கள் முதலில் நெருப்பு, சக்கரம் போன்றவற்றை கண்டுபிடித்து படிப்படியாக தனது அறிவாற்றலால் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்தை சோதிக்க செயற்கை கோளை அனுப்பும் வல்லமை படைத்தவராக மாறியுள்ளனர். இதை தான் நாம் சிறு வயதிலிருந்து பாட புத்தகத்தில் பயின்று வருகிறோம்.உலகில் மனித இனம் மற்ற இனங்களை அடக்கி ஆண்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தில் நடைபெற்ற அகில இந்திய வேதிக் சம்மேள மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கலந்து கொண்டு உரையாடினார். அதில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய செய்தியை தெரிவித்துள்ளார். அதில் "குரங்கில் மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வின் பரிணாம கோட்பாடு தவறானது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் மூதாதையர்கள் தெரிவிக்க வில்லை. மனிதன் உலகம் உருவான காலத்தில் இருந்து மனிதனாக தான் வாழ்கிறான். ஆகவே டார்வினின் இந்த கோட்பாடு தவறானது. இதனை பள்ளி பாட புத்தகத்தில் நீக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பேச்சு விஞ்ஞானிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வானியல் ஆய்வாளரான கோவிந்த் ஸ்வரூப் "மத்திய அமைச்சரின் ஏற்கத்தக்கது அல்ல. மனிதனின் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் டார்வின் கோட்பாட்டுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பேச்சு ஒரு விஞ்ஞானியாக எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் நிபுணர் அணிக்கெட் சுலே கூறுகையில் "பல நூற்றாண்டுகளாக மனிதனின் புதிய ஆராய்ச்சிகளுக்கு டார்வின் கோட்பாடு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. ஒரு அமைச்சருக்கு இது கூட தெரியாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.