ads

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 121வது பிறந்த நாள்

subhas chandra bose 121th birth anniversary

subhas chandra bose 121th birth anniversary

இன்று இந்திய சுதந்திர போராட்ட தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள். நேதாஜியின் 121வது பிறந்த நாளையொட்டி அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான மக்கள் இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இவர் இதே நாளில் 1897-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை இவர் ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று சீனாவின் தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும் பல வதந்திகள் இவருடைய இறப்பில் உள்ளது. 1945 ஆம் ஆண்டு 14-ஆம் தேதி முதல் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை எந்த விமான விபத்தும் தைவானில் நடக்கவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது சுபாஷ் சந்திர போஸ் அந்த ஆண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவானதாக அமைகிறது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதுகுறித்து விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி தைவானில் நடந்த விமான விபத்தில் இறக்கவில்லை என தெரிவித்தது.  

அந்த காலத்தில் நாட்டின் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்டதால் அவரது தந்தை இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாமல் லண்டனில் ஐ.சி.எஸ் (Indian Civil Service - ICS) தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார். தன் படிப்பை தொடர்ந்த நேதாஜி லண்டனில் நடந்த 1920 ஆம் ஆண்டு இந்திய மக்கள் சேவை படிப்புக்கான தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் தனது முயற்சியுடன் படித்துப் பெற்ற அந்த பதவியை லண்டனிலேயே ராஜினாமா செய்தார். 

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 121வது பிறந்த நாள்