ads

தாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி

தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம் என்று சன்னி வக்ப் வாரியம் உரிமை கோரி வருகிறது.

தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம் என்று சன்னி வக்ப் வாரியம் உரிமை கோரி வருகிறது.

உலக அதிசயங்களுள் ஒன்றாக தாஜ்மஹால் சிறந்து விளங்குகிறது. காதலர்களின் நினைவு சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். தாஜ்மஹாலின் வடிவமைப்பும், அதன் கட்டிட அம்சமும் தற்போதுள்ள நவீன கலைஞர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. இத்தகைய தாஜ்மஹாலை மொகலாய அரசர் ஷாஜஹான், தன்னுடைய  மனைவி மும்தாஜின் நினைவாக 22000 பணியாளர்களை கொண்டு கட்டியுள்ளார். இதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சென்ற தாஜ்மஹால், சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

தற்போது தாஜ்மஹாலை இந்தியாவின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தின் சன்னி வக்ப் வாரியம், தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம், அதன் பராமரிப்பு பணிகளையும் மொகலாய வம்சத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரி வருகிறது. இதனால் இந்திய தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் 2010இல் வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உலகின் ஏழு அதிசயங்கள் ஒன்றாகவும், நினைவு சின்னமாகவும் இருக்கும் தாஜ்மஹால் மொகலாயரின் வீழ்ச்சிக்கு பிறகு ஆங்கிலேயரிடம் சென்றது.

விடுதலைக்கு பிறகு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. ஷாஜஹான், அவருடைய மகன் அவுரங்க சிப்பால் 18 வருடங்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஷாஜஹான் எப்போது வந்து வக்ப் வாரியத்திற்கு எழுதி கொடுத்தார்? என சரமாரி கேள்வி எழுப்பியது. மேலும் ஷாஜஹான் தன் கைப்பட எழுதிய ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி