ads
கனடா பிரதமரை சந்தித்து நடிகர் மாதவன் செல்பி
வேலுசாமி (Author) Published Date : Feb 22, 2018 10:31 ISTஇந்தியா
கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடா என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் கனடா நாட்டின் 23வது பிரதமர் மற்றும் ஜோ க்ளெர்க் என்பவருக்கு பிறகு அந்நாட்டின் இரண்டாவது இளம் பிரதமராவார். இவர் தற்போது அரசுமுறை பயணத்திற்காக தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார்.
இவரை தமிழக மக்கள் விரும்புவதற்கு காரணம், அவர் தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் மதித்து அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார். கடந்த திங்கட் கிழமை குஜராத் மாநிலத்தை வந்தடைந்த இவர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அப்போது மகாத்மா காந்தி தங்கியிருந்த ஷ்ருதாய் குஞ்ச் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அங்கியிருந்து தான் மகாத்மா காந்தி அகிம்சை போராட்டத்தை நடத்தினார். பின்னர் இங்கிருந்து சுவாமி நாராயண் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது அங்கிருந்த பதிவேட்டில் ' இந்த இடம் அமைதிக்கான இடம்' என்று கையெழுத்திட்டார். இதனை அடுத்தது தனது பயணத்தை முடித்து டெல்லி திரும்பும்போது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்துள்ளார்.
இருவரும் உரையாடிய போது விஜய் ரூபாணி, அவரை அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு தெரிவித்தார். இவரின் அழைப்பை ஏற்று ஜஸ்டின் ட்ருடா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். தமிழ் பண்பாட்டினை பெரிதும் மதிக்கும் இவர் இந்தியாவில் பல கலாச்சார தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற ஒரு விழாவில் இவர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட பல திரை வட்டாரங்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் மாதவனுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.