ads

முல்லைத்தீவு கடலில் நீடிக்கும் மர்மங்களை ஆராய அமெரிக்க ஆய்வு குழு வருகை

அமெரிக்க ஆய்வு குழு ஒன்று முல்லைத்தீவில் கடல் மாற்றங்களை ஆராய வருகை தந்துள்ளது.

அமெரிக்க ஆய்வு குழு ஒன்று முல்லைத்தீவில் கடல் மாற்றங்களை ஆராய வருகை தந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் கடலில் ஏற்படும் மாற்றங்கள் கடலோர பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் கடலில் நீர்மட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தவிர இயற்கை சீற்றங்களான புயல்,  சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றின் தாக்கமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. இயற்கை பேரிடர்களால் பெரும்பாலும் கடலோர பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இலங்கை, முல்லைத்தீவு கடல் பகுதிகளில் ஏற்படும் கடல் மாற்றங்கள் மக்களை அதிகப்படியாக அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் முல்லைத்தீவு கடலின் தன்மையில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடலின் நீர்மட்டமும் ஐந்து அடி வரை உயர்ந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகரித்து வரும் நீர்மட்டதால் கடல் கொந்தளிப்புடனும், அதன் நிறம் மாறியும் காணப்படுகிறது.

இதனால் அஞ்சிய முல்லைப்பகுதி மக்கள் சுனாமி வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கடலில் பூஜை ஒன்றை நடத்தியுள்ளனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி காமினி, தற்போதுள்ள நிலைமை குறித்து அறிவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ஆய்வு செய்ய யாழ்ப்பாண பல்கலைக்கழக குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களாலும் எதையும் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் தற்போது அமெரிக்க சுற்றுசூழல் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினரின் அழைப்பிற்கேற்ப முல்லைத்தீவிற்கு வருகை புரிந்துள்ளனர். தற்போது கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முதற்கட்ட ஆய்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது தவிர உலகின் பல்வேறு இடங்களில் பல வகையான திமிங்கலங்கள் கடலோர கடற்கரைகளில் கரையொதுங்கி இறந்து வருகிறது. கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் மற்றும் தன்மைகள் காரணமாக திமிங்கலங்கள் அஞ்சியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முல்லைத்தீவு கடலில் நீடிக்கும் மர்மங்களை ஆராய அமெரிக்க ஆய்வு குழு வருகை