ads

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வருகின்ற மே 30ஆம் தேதி முதல் 48மணி நேரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வருகின்ற மே 30ஆம் தேதி முதல் 48மணி நேரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் குறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் என்பவர் கூறுகையில் " ஊதிய விகித ஒப்பந்தம் வங்கி ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் நவம்பர் மாதமே புதிய ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்காக வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஊதிய விகிதம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்த சமயத்தில் கடந்த 5-ஆம் தேதி மும்பையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர். வங்கிகளின் மொத்த லாபம் கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் ஓராண்டில் 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆனால் பணக்கார புண்ணியவான்கள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தை ஈட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. மும்பையில் இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 2 நாட்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30 மற்றும் 31ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தனியார் பொதுத்துறை மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சமும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்