ads

சென்னையில் தாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய போக்குவரத்து அதிகாரிகள்

 தாய் மற்றும் சகோதரி கண்முன்னே இளைஞரை தாக்கிய சென்னை போக்குவரத்து அதிகாரிகள்.

தாய் மற்றும் சகோதரி கண்முன்னே இளைஞரை தாக்கிய சென்னை போக்குவரத்து அதிகாரிகள்.

தற்போது சென்னை, தியாகராய நகரில் தாய் மற்றும் சகோதரி கண்முன்னே இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோகுறித்து போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில் கம்பத்தில் இளைஞரை, காவல்துறை அதிகாரி பிடித்துக்கொண்டு இன்னொரு காவல் அதிகாரி அந்த இளைஞரின் கையை போட்டு முறுக்கி அடித்து கொன்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த பெண்கள் இதை கண்டு அலறுகின்றனர். சென்னையில் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் கார் கம்பெனியில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தன்னுடைய அம்மா, சகோதரியுடன் நேற்று பைக்கில் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதில் "வெளியான வீடியோ நடந்த சம்பவத்தில் ஒருபகுதி மட்டுமே. முழு வீடியோவையும் பார்த்தால் காவல்துறையினர் மீது தவறு இல்லை என்பது தெரியவரும்.

உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் அருகே சுரேஷ், ஜெயராமன் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் வந்துள்ளனர். பைக்கை ஓட்டிய இளைஞர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் போலீஸார், அந்த பைக்கை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது காவல்துறையினருக்கும் பைக்கில் வந்த இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியது. சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷை முதலில் அந்த இளைஞர் தாக்கியதால் அவரது தோள்பட்டையில் இருந்த ஸ்டார் மற்றும் பட்டன்கள் அறுந்தது.

இதைப் பார்த்த இன்னொரு உதவி ஆய்வாளர் உடனடியாக அருகில் உள்ள மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

சென்னையில் தாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய போக்குவரத்து அதிகாரிகள்