ads

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் சுமார் 10 ஆயிரம் கோடி செலவில் 277 கிமீ தூரம் வரை அமைய உள்ளது. இந்த திட்டத்திற்காக 2790 ஏக்கர் நிலங்கள் தேவைப்படும் நிலையில் அதற்கான நிலங்களை ஏழை மக்களிடம் இருந்து அரசு அபகரித்து வந்தது. இந்த திட்டத்தினை எதிர்த்து ஏழை மக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒவ்வொருவரையும் வயது வரம்பு பாராமல் அரசு கைது செய்து வந்தது.

இந்த திட்டத்தினால் நேரும்  மலைகள், மரங்கள், விவசாய நிலங்கள் இவற்றின் இழப்புகளை பாராமல் மக்களுக்கு 1 மணிநேரம் மிச்சப்படுத்துவதை அரசு பெரிதாக எண்ணி இந்த திட்டத்தை நடைமுறை படுத்தியது. முன்னதாக இந்த திட்டத்தினை எதிர்த்து அன்புமணி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் - சென்னை எட்டு வழிசாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தடை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்காக மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்