ads
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை
வேலுசாமி (Author) Published Date : Feb 19, 2018 18:44 ISTஇந்தியா
6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஸ்வந்த் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதேபகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. பின்னர் நீதிபதி வேல்முருகன் தலைமையில் ஹாசினி கொலை வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடந்துவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட 30 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. இதன் பிறகு கடந்த 14-ஆம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்தது ஆனால் பிப்ரவரி 19-ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதன்படி இன்று ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்காக நீதிமன்ற அறைக்குள் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் மற்றும் இதர வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதி வழங்கப்படவில்லை.
முன்னதாக குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்ற வளாகத்திலே தாக்கப்பட்டதால் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற அறையின் கதவுகள் மூடப்பட்டன. இதனை அடுத்து தீர்ப்பு தொடர்பான இறுதி விவாதம் நடைபெற்றது. அப்போது சிறுமியின்பெற்றோர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில் ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி அறிவிக்கப்பட்டது. அப்போது தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தஷ்வந்த் கேட்டுக்கொண்டதை அடுத்து தண்டனை விவரத்தை ஒரு மணி நேரம் கழித்து வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வாசித்த தீர்ப்பில் சிறுமி ஹாசினியை எரித்து கொன்ற வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட தஷ்வந்துக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.