ads

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட முதல்வர் துணை முதலமைச்சர் உண்ணாவிரதம்

மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள 'ஸ்கீம் (Scheme)' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது. 

அதன்படி இன்று அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்  தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கு பெற்றனர். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தற்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் எடப்பாடி, பன்னீர்செல்வம் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க சட்டம் இருக்கா என்ற விவாதம் நடந்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட முதல்வர் துணை முதலமைச்சர் உண்ணாவிரதம்