ads
தமிழ்நாடு: கொரோனா வைரஸ் நோயால் சென்னை மருத்துவர் உயிரிழப்பு
புருசோத்தமன் (Author) Published Date : Apr 19, 2020 23:31 ISTஇந்தியா
கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த மக்களை காப்பாற்றும் வகையில் அனைத்து மருத்துவர்களும் துணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டு, அப்போலா மருத்துவமனையில் பெற்று வந்தார்.
அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார், இவருக்கு வயது 58 மற்றும் இவர் நரம்பியல் நிபுணர். மக்களுக்காக அயராத உழைக்கும் மருத்துவர்களை மனதில் கொண்டு, மக்கள் பாதுகாப்பாக வீட்டில் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
இன்று தமிழகத்தில் மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர் , பத்திரிகையாளர்கள் மற்றும் பிறந்து இரண்டு நாள் ஆன குழந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.