ads

குளியலறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த தம்பதியினர்

 கடந்த வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு தங்களது அறைக்கு சென்ற தம்பதியரை இறந்த நிலையில் குடம்பத்தினர் மீட்டனர். photo @neeraj.singhania.98 (facebook)

கடந்த வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு தங்களது அறைக்கு சென்ற தம்பதியரை இறந்த நிலையில் குடம்பத்தினர் மீட்டனர். photo @neeraj.singhania.98 (facebook)

காஜியாபாத், கடந்த வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு தங்களது அறைக்கு சென்ற தம்பதியரை இறந்த நிலையில் குடும்பத்தினர் மீட்டனர். நீரஜ் மாட்ரிஸ் செல்லுலார் என்னும் நிர்வணத்தில் ஜெனரல் மானேஜராக பணிபுரிகிறார், அவருக்கு வயது சுமார் 38 இருக்கும். சம்பவத்தின் அன்று வெள்ளிக்கிழமை மாலை, தனது மனைவி ருச்சியுடன் மற்றும் குடும்பத்தாருடன் ஹோலி பண்டிகையை சந்தோசத்துடன் கொண்டாடிவிட்டு, வீடு திரும்பினர்.சிறிது நேரத்தில் அனைவரும் இரவு விருந்திற்காக செல்லயிருந்தனர், வெகு நேரம் ஆகியும் நீரஜ் மற்றும் அவரது மனைவி ருச்சி வெளியில் வராததால் சற்றும் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், அரை கதவை தட்டியும் வேறு வழியில் உள்ளே பார்த்த போது, ருச்சி அவர்களின் கால் பகுதி குளியலறை வழியாக தெரிந்ததை பார்த்த குடும்பத்தினர் , கதவை உடைத்து உளளே நுழைந்தனர். அங்கு தம்பதியினர் இருவரும் குளியலறையில் பிறந்தமேனியாக நினைவு இல்லாமல் இருந்துள்ளனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்த போது, இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துஉள்ளனர்.

மர்மமான முறையில் இறந்த தம்பதியரை பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். எந்த ஒரு காயங்களும் இல்லாததால், குளியல் அறையில் உள்ள தண்ணிரை சூடாக்கும் சாதனத்தில் உள்ள காஸ் அல்லது மின்சாரம் தாக்கியதா அல்லது கொலையா என்ற விளக்கம் பிரேத பரிசோதனைக்குப்பின் தெரியவரும்.

இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளத்து.

குளியலறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த தம்பதியினர்