ads
மூணார் நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது
புருசோத்தமன் (Author) Published Date : Aug 13, 2020 11:09 ISTஇந்தியா
கேரளா: இடுக்கி, மூணார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் இன்னும் 16 உடல்கள் சிக்கியுள்ளன. அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, மழை அதிகரிக்கும் பட்சத்தில் மீட்புப்பணி தாமதமாகும் வைப்புப்புள்ளது.
மூணாரில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பிராந்தியத்தின் கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டத்தில் பெய்த கனமழையால், ஒரு சோகமான நிலச்சரிவு நள்ளிரவில் ஏராளமான மக்களை மண்ணுக்குள் அழைத்துச் சென்றது. இவற்றில், குடியிருப்பு பகுதியில் உள்ள 20 வீடுகள் மண்ணில் அப்படியே புதைக்கப்பட்டன.
மேலும், 78 தமிழகத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உயிருடன் நிலச்சரிவில் புதைந்துள்ளனர். நிலச்சரிவைத் தொடர்ந்து, கேரள தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட 600 க்கும் மேற்பட்டோர் சுமார் ஏழு நாட்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களில் 90% பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.