ads
முட்டை சைவம் என ஆய்வில் முடிவு
புருசோத்தமன் (Author) Published Date : Nov 29, 2017 17:23 ISTஇந்தியா
மக்களிடையே சைவம் அசைவம் என இரு வேறுபாடுகள் உள்ளது. சைவம் சாப்பிடுவோர் அசைவத்தை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள், ஆனால் அசைவ பிரியர்கள் இரண்டிலுமே கலந்து விளையாடுவார்கள். ஆனால் இருவரிடையே கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது போல் முட்டை சைவமா? அசைவமா? என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. முட்டையின் தாக்கம் அனைவரிடமும் இருந்து வருகிறது. நான் முற்றிலும் சைவம் அசைவதை தொடவே மாட்டேன் என்று சொல்லுவோர் முட்டை பிரியர்களாக இருந்து வருகின்றனர்.
முட்டை என்பது கரு, வெள்ளை கரு, முட்டை ஓடு போன்றவற்றால் ஆனது. இதில் முற்றிலும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. முட்டையில் உள்ள கருவில் வளர்ச்சி நிலையில் ஒரு உயிரின் கரு இருப்பதில்லை. இந்த முட்டை வளர்ச்சி அடைவதற்கு முன்பே அதை நாம் சாப்பிடுகிறோம். இந்த முட்டைகள் கருவுறா முட்டைகள் ஆகவே முட்டை சைவ வகையை சார்ந்தது என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த செய்தி சைவ பிரியர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் அசைவ பிரியர்கள் "எதாக இருந்தால் என்ன சாப்பிடுவதற்கு தடை இல்லையே" என்று விமர்சித்து வருகின்றனர்.