ads
மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலி
மோகன்ராஜ் (Author) Published Date : Jul 24, 2018 12:12 ISTஇந்தியா
சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த நான்கு இளைஞர்கள், பரங்கிமலையை நெருங்கிய போது அங்கிருந்த தடுப்பு சுவர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தடுப்பு சுவர் மோதியதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய இளைஞர்களிடையே பேருந்து மற்றும் ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்வதை இளைஞர்களுக்கான கெத்து என்று நினைத்து பயணம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மக்கள் தொகை காரணமாகவும், பேருந்து பற்றாக்குறை காரணமாகவும் இரவு நேரத்தில் செல்லும் பேருந்து மற்றும் ரயிலிலும் கூட கூட்டம் நிரம்பியே வருகிறது.
இதனால் படிக்கட்டில் தொங்கித்தான் வீட்டுக்கு போக வேண்டும் என்ற நிலைமையில் இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்களும் பயணம் செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. தற்போது உயிரிழப்பு நேர்ந்துள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று இரவு இரண்டு உயிர் பறிபோனது.
தற்போது மீண்டும் அதே இடத்தில் நான்கு உயிர் பறிபோகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஏடிஜிபி சைலேந்திரபாபு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பொது மக்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தற்போது விபத்து ஏற்பட்டுள்ள இந்த வழித்தடத்தில் உள்ள தடுப்பு சுவரை அகற்றவும், ரயில்களை இயக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.