ads

பிரதமர் மோடியை இணையத்தில் வறுத்தெடுக்கும் தமிழக மக்கள்

மோடியின் வருகையை எதிர்த்து தமிழக மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மோடியின் வருகையை எதிர்த்து தமிழக மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீருக்காக விவசாயிகளின் கண்ணீர் குரலும், மக்களின் வாழ்வியலை பறிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்ட முழக்கங்களாகவே காணப்படுகிறது. இந்த போராட்டங்கள் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நிகழ்ந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் அரசாங்கம் சற்றும் திரும்பி கூட பார்க்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை புரியவுள்ளதாக தகவல் அறிந்தவுடன் ஆத்திரமடைந்த தமிழக மக்கள், மோடியின் வருகையை எதிர்த்து '#GOBACKMODI' என்று முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர். இந்த வார்த்தை தற்போது சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி உள்ளது. மோடியின் வருகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.

உலகம் முழுவதும் ட்ரண்டான இந்த வார்த்தையை கண்டு பல மாநிலங்கள் திகைத்து போயுள்ளது. இதையெல்லாம் பிரதமர் மோடி கண்டு, தற்போது டெல்லி திரும்பியுள்ளார். அநேகமாக மறுபடியும் தமிழ்நாட்டு பக்கம் கூட எட்டி பார்க்க மாட்டார். இப்போதாவது தமிழ்நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையும், விவசாய மக்களின் குரலும் பிரதமரின் காதில் விழுந்திருக்கும். 

பிரதமர் மோடியை இணையத்தில் வறுத்தெடுக்கும் தமிழக மக்கள்