ads

மீண்டும் திரையரங்கின் டிக்கெட் கட்டணம் உயர்வு

gst tax for theatre tickets rise again

gst tax for theatre tickets rise again

இன்றைய உலகில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக சினிமா விளங்குகிறது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் புதிய படம் வெளிவரும் போது அலை மோதுகிறது, முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களுக்கு ஒரு மாதம் முதல் இரண்டு மூன்று மாதங்கள் வரை திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் ஹவுஸ் புல்லாக இருக்கும். சமீபத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதனால் சிறந்த பொழுது போக்காக விளங்கும் தியேட்டர் கட்டணத்திற்கு 30 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்க பட்டது.

இதனால் ஒவ்வொரு திரையங்குகளிலும் டிக்கெட் கட்டணம் 50 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. திரையரங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த சேவை வரி மூலம் பல நஷ்டங்களை சந்தித்தனர். இதனை அடுத்து தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து ஜிஎஸ்டி வரிக்கு எதிராக போராட்டங்களை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தால் வெளிவரக்கூடிய படங்கள் நீண்ட நாள் கழித்தே வெளிவந்தது. போராட்டத்தின் பலனாக பிறகு 28 சதவீத ஜிஎஸ்டி வரியை 8 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை சூர்யா, விக்ரம், பிரபு தேவா போன்ற  முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இந்த படங்களுக்காக நீண்ட நாள் ரசிகர்கள் காத்திருக்கும் தருவாயில் தற்போது மீண்டும் டிக்கெட் கட்டணத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரி 28 சதவீதமாக வுயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் போராட்டத்தில் உரிமையாளர்கள் ஈடுபடுவதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள், உரிய செயலாளர்களிடம் பேசிய போது, இது தவறுதலாக வந்த தகவலாக இருக்கும் என்று மறுத்துள்ளனர். இந்த சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளதா என்பது நாளை தெரியவரும்.

மீண்டும் திரையரங்கின் டிக்கெட் கட்டணம் உயர்வு