ads
உலக தனிமலைகளில் உயரமான மலையான கிளிமாஞ்சாரோ சிகரத்தை எட்டிய ஏழு வயது சிறுவன்
வேலுசாமி (Author) Published Date : Apr 17, 2018 12:51 ISTஇந்தியா
ஆப்பிரிக்காவின், டான்சானியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்குக்கும் உயராமான, எரிமலை வகையை சார்ந்த மலை, கிளிமாஞ்சாரோ. ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள மலைகளில் மிக உயர்ந்த மலை. இது கடல் மட்டத்திலிருந்து (Mean Sea Level) 5895 மீட்டர் (19,340 அடி) உயரத்தில் உள்ளது. இந்த மலையின் மிக உயர்ந்து முகட்டு "உகுரு (Uhuru)" என்றழைக்கப்படுகிறது. இது தவிர கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என இதர மூன்று எரிமலை முகடுகள் உள்ளது. கிளிமாஞ்சாரோ, எந்த மலைத்தொடரையும் சாராத தனி மலையாகும். இமயமலையை ஒப்பிடும்போது கிளிமஞ்சாரோ உயரத்தில் குறைந்தது தான்.
ஆனால் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் ஒப்பிடும்போது கிளிமாஞ்சாரோ மிக உயரமானது. தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மலையேற்ற குழுவினர் இங்கு வருகை புரிகின்றனர். இதன்படி ஐதராபாத்தில் இருந்து மலையேற்ற குழு ஒன்று கிளிமாஞ்சாரோவை அடைந்தது. இதில் 7 வயதே ஆன சமன்யு பொதுராஜ் என்ற சிறுவனும் ஒருவன். இந்த சமன்யு என்ற சிறுவன் தன்னுடைய பயிற்சியாளர் மற்றும் தாயார் ஆகியோருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளான்.
தாய் உடல்நல பிரச்சனையால் திரும்பிவிட சற்றும் மனம்தளராத சிறுவன் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி கிளிமாஞ்சாரோவின் உயரமான சிகரமான உகுரு சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளான். இது குறித்து சமன்யு என்ற சிறுவன் கூறுகையில் "அது மழைக்காலம் என்பதால் சாலைகள் முழுவதும் கற்களாகவே இருந்தது. என்னுடைய காலில் ஏற்பட்ட ஏற்பட்ட வலியால் சற்று பயந்தேன். ஆனால் வழியில் சிறிது சிறிதாக ஓய்வு எடுத்து சிகரத்தை அடைந்தேன். எனக்கு பனி என்பது மிகவும் பிடிக்கும். இதுவே கிளிமாஞ்சாரோவே அடைய காரணமாக இருந்தது.
நான் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய தாயார், சிகரத்தை அடைந்தால் பவன் கல்யாணி சந்திக்க ஏற்பாடு செய்வதாக வாக்கு தந்திருந்தார். அடுத்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரத்தை அடைய முயற்சி செய்ய உள்ளேன்" என்று அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். சாதனை படைத்த சிறுவன், கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதல் கிளிமாஞ்சாரோவின் சிகரத்தை அடைய ஏற ஆரம்பித்து 5 நாட்களில் உகுரு சிகரத்தை அடைந்துள்ளான். இவரின் இந்த சாதனைக்கு ஏராளமான பொது மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.