ads

முன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

பிரபல தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

பிரபல தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று காக்நிசன்ட் (Cognizant). இந்நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தனது கிளைகளை நிறுவி வரும் இந்நிறுவனத்தில் 3 லட்சத்திற்கும் மேலாக ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

இதில் 2 லட்சம் பணியாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மும்பை, சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, புனே மற்றும் கொச்சி போன்ற இடங்களில் தனது அலுவலகங்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வங்கி, மருத்துவம், உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, காப்பீடு, வியாபாரம் போன்ற பல துறைகளில் தனது சேவையை அளித்து வருகிறது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் "காக்நிசன்ட் (Cognizant)" நிறுவனம் 2500 கோடி ரூபாய் செய்துள்ளதாக வருமானவரித்துறை புகார் அளித்தது.

இது குறித்து இந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு முறையான விளக்கம் அளிக்கப்படாததால் சென்னை மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016-17 நிதியாண்டில் இந்நிறுவனம் 2500 கோடிக்கு மேல் நிலுவை தொகை செலுத்தவேண்டியிருந்தது. ஆனால் செலுத்த தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

முன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்