ads

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராச்சியாளர் நவீன் வரதராஜனுக்கு 1 மில்லியன் டாலர் உதவி

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த நவீன் வரதராஜன் என்ற ஆராச்சியாளருக்கு டெக்ஸாஸ் புற்றுநோய் தடுப்பு நிறுவனம் 1 மில்லியன் டாலர் நிதி, Image Credit - uh.edu

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த நவீன் வரதராஜன் என்ற ஆராச்சியாளருக்கு டெக்ஸாஸ் புற்றுநோய் தடுப்பு நிறுவனம் 1 மில்லியன் டாலர் நிதி, Image Credit - uh.edu

அமெரிக்காவில் வுல்க்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த நவீன் வரதராஜன் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது புற்று நோய் குறித்து பல ஆராச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவருடைய ஆராச்சிக்கு உதவும் விதமாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த புற்றுநோய் தடுப்பு ஆராச்சி நிறுவனம் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வழங்கியுள்ளது.

இது இந்திய மதிப்பில் 7 கோடியே 16 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாகும்.  இந்தியாவை சேர்ந்த ஆராச்சியாளர் நவீன், புற்று நோயாளிகளுக்கு டி செல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆராச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் மேற்கொண்டு வரும் ஆராச்சியின் மூலம் டி செல்களை மேம்படுத்துவதன் மூலம் பாதிக்க பட்ட புற்று நோயாளிகளின் உடலில் உள்ள புற்று நோய் கட்டிகளின் செல்களை செயலிழக்க வைக்கமுடியும்.

தனக்கு கிடைத்த உதவித்தொகை மூலமாக புற்று நோயை அழிக்க தீவிரமாக செயல்படுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து சங்யுங் ஜங் என்ற மற்றொரு ஆராச்சியாளர் செயல்பட்டு வருகிறார். இவர் கர்ப்பப்பை புற்று நோய் குறித்து ஆராச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவை சேர்ந்த நவீன் வரதராஜனுடன் இவருக்கும் 8 லட்சம் டாலர்கள் புற்றுநோய் தடுப்பு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராச்சியாளர் நவீன் வரதராஜனுக்கு 1 மில்லியன் டாலர் உதவி