ads

சிந்து சமவெளி மக்களின் இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைந்த 900 ஆண்டுகள் நீடித்த கடுமையான வறட்சி

900 ஆண்டுகளாக நீடித்த கடுமையான வறட்சி காரணமாகவே சிந்து சமவெளி மக்கள் இதர கண்டங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

900 ஆண்டுகளாக நீடித்த கடுமையான வறட்சி காரணமாகவே சிந்து சமவெளி மக்கள் இதர கண்டங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சிந்து சமவெளி நாகரிகம், உலகின் மிக பழமையான நாகரிங்களுள் ஒன்று. இந்த நாகரிகம் தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளை உள்ளடக்கி கிமு 3000 க்கும் கிமு 2500க்கும் இடைப்பட்ட காலங்களில் உச்சநிலையில் இருந்துள்ளது. சிந்து சமவெளி மக்களின்  மொழியை பற்றியோ, அவர்கள் இனத்தை பற்றியோ எந்த தகவலும் தற்போதுவரை வெளிவரவில்லை. சிந்து சமவெளி மக்களை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. தற்போது வரை தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முத்திரைகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களை தற்போதுவரையும் எவராலும் வாசிக்க முடியவில்லை. இதுபோன்று இவர்களின் வாழ்க்கை நெறிகளை பற்றிய குழப்பங்களும், அழிவிற்கான காரணங்களும் நீடித்து கொண்டே வருகிறது. சிந்து சமவெளி மக்கள் கட்டிட கலையிலும், வணிக துறையிலும் புகழ்பெற்று விளங்கியுள்ளனர். இதற்கு தொல்லியல் துறை கண்டெடுத்த கட்டிடங்களும், உபயோகித்த கருவிகளும் ஆதாரமாக இருக்கிறது.

இப்படி புகழ்பெற்று விளங்கிய சிந்து சமவெளி மக்களின் அழிவிற்கும், அவர்களின் இடம்பெயர்தலுக்கும் காரணமாக வறட்சி போன்ற இயற்கை சூழல்கள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சில ஆண்டுகளாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் காரக்பூர் ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் அணில் கே குப்தா அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், சிந்து சமவெளி மக்களின் இடப்பெயர்தலுக்கு 900 ஆண்டுகள் வரை நீடித்த வறட்சியை காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு குழுவில் இந்தியா, ஜப்பான், சீனா போன்ற தென்னிந்திய ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வின் மூலம் சிந்து சமவெளியில் 900 ஆண்டுகள் நீடித்த கடுமையான வறட்சிக்கு 'எல் நினோ விளைவு (El Nino Effect)' என்ற காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது. வறட்சி நீண்ட காலத்திற்கு நீடித்ததால் அப்பகுதியில் தண்ணீர் இல்லை, நீர்நிலைகளிலும் தண்ணீர் குறைந்து விட்டது. விவசாயமும், கால்நடைகளும் அவர்களின் வாழ்க்கைக்கு முக்கியமாக கருதப்பட்டதால் அவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இதனால் இடம்பெயர்ந்த சிந்து சமவெளி மக்கள் அதிகமாக மழை பெய்யும் தென்னிந்தியாவிலும், கிழக்கு பகுதிகளுக்கும் சென்று குடியேறியதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிந்து சமவெளி மக்களின் இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைந்த 900 ஆண்டுகள் நீடித்த கடுமையான வறட்சி