ads

தமிழக மீனவர்களுக்கு ஆபத்தில் இருக்கும் பொது இடங்களை அறிய புதிய செயலி இஸ்ரோ இயக்குனர் சிவன்

தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு புதிய செயலி தயாராகியுள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் சிவன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு புதிய செயலி தயாராகியுள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் சிவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கடலோரத்தில் வாழும் தமிழக மீனவர்கள், இயற்கை சீற்றங்களாலும், கடலோர காவல் படைகளாலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மீன் பிடிப்பதை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்தி வரும் மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது திடீரென ஏற்படும் புயலாலும், மழைகளாலும் கடலுக்குள் சிக்கி ஏராளமான மீனவர்கள் உயிரிழக்கின்றனர்.

சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலால் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே வேதனைக்கு உள்ளாக்கியது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் புயல், கடுமையான கடல் கொந்தளிப்பு வருமுன் எச்சரிக்கை விடுத்திருந்தால் நாங்கள் மீனவர்களை கடலுக்குள் அனுப்பியிருக்க  மாட்டோம் என்று மீனவ குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சிவன் அவர்கள், தமிழக மீனவர்கள் இயற்கை சீற்றங்கள் போன்றவை ஏற்படும் போது அவர்கள் இருக்கும் இடத்தை அறிய நேவிகேஷன் மற்றும் ஜிபிஎஸ் போன்ற செயலிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதனை மீனவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அவர் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ஜிசாட் 11 சந்திராயன் போன்ற பெரிய திட்டங்கள் இருப்பதால் சுவாமி தரிசனம் செய்தேன் என்றும், செயற்கை கோள் மற்றும் ராக்கெட் போன்றவைகளுக்கு உதிரி பாகங்கள் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு செயற்கை கோள் உதவியுடன் பாடத்திட்டங்கள் நடத்தும் திட்டமும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தமிழக மீனவர்களுக்கு ஆபத்தில் இருக்கும் பொது இடங்களை அறிய புதிய செயலி இஸ்ரோ இயக்குனர் சிவன்