ads
காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானார்
வேலுசாமி (Author) Published Date : Feb 28, 2018 11:17 ISTஇந்தியா
சந்திரசேகர சரஸ்வதி எனப்படும் ஜெயேந்திர சரஸ்வதி காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் சங்கர மடத்தின் (காஞ்சி காமகோடி பீடம்) 69வது சங்காரச்சார்யர் ஆவார். திருவாரூரில் பிறந்த இவர் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக 1954-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார்.
காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்ற தலைவராக விளங்குகிறார். இம்மடத்திற்கு உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் இந்த மடத்தின் ஆதரவாளர்களாக விளங்குகின்றனர்.
மேலும் இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்கி வருகின்றன.
இந்நிலையில் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த மூச்சு திணறல் திடீரெனெ சமீபத்தில் அதிகரித்துள்ளது. உடனே போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இன்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் உடல் தற்போது காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை காண பெரும்பாலான மக்கள் வரவுள்ளதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.