ads

தனுஷ் எங்களை ஒருமுறை சந்தித்தால் போதும் - கதிரேசன்

kathiresan press meet

kathiresan press meet

மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று சமீப காலமாக தெரிவித்து வருகிறன்றனர். இதனால் மேலூர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் மாதம் 65 ஆயிரம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் நடிகர் தனுஷ் இந்த வழக்கை ரத்து செய்யுமாறு மேலூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த பிறகு நீதிபதி கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தனர். இந்நிலையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கதிரேசன் என்பவர் பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். அதில் "நடிகர் ரஜினிகாந்த தனது ரசிகர்களை 31-ஆம் தேதி வரை சந்தித்து வருகிறார்.

அதில் அவர் கூறும்போது தாய் தந்தை தான் முக்கியம், குடும்பம் தான் முக்கியம், அவர்கள் காலில் தான் விழ வேண்டும், குடும்பத்தை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக நடிகர் ரஜினிக்கு நான் மனதார பாராட்டுகிறேன். இவரின் மருமகனான தனுஷின் பெற்றோர்களான எங்களை ஒரு முறை சந்திக்க ரஜினிகாந்த் உதவி செய்ய வேண்டும். நான் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தனுஷ் என்னுடைய மகன் என்பது ரஜினி, தனுஷின் மனசாட்சிக்கு தெரியும். எனக்கு காசு பணம் வேண்டாம், உடல்நல குறைவால் மேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது மனைவியை ஒரு முறை வந்து அவர் சந்தித்தால் போதும்." என்று தெரிவித்துள்ளார்.

kathiresan press meetkathiresan press meet

தனுஷ் எங்களை ஒருமுறை சந்தித்தால் போதும் - கதிரேசன்