ads
கேரளா வந்த வெளிநாட்டு பெண் உடல் சடலமாக மீட்பு
ராசு (Author) Published Date : Apr 22, 2018 10:27 ISTஇந்தியா
கேரளா காவல்துறைக்கு ஒரு பெண்ணின் உடல் தலை இல்லாமல் இருப்பதாக தகவல் வந்தது, உடனே விரைந்து வந்த காவல் துறை இது குறித்து விசாரித்த போது அந்த உடல் ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன வெளிநாட்டை சேர்ந்த பெண்ணின் உடல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சைக்காக தனது தங்கையுடன் வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இவரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது, போலீசார் இவர் காணாமல் போன பெண் என்று தெரிந்த பின்னர் தான் பத்திரிகைகளுக்கு தெரிய படுத்தியுள்ளனர்.
33 வயதாகும் லிகா ஸ்க்ரோமனே (Liga Skromane), ஐரிஷ் (irish) நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு இருந்த மன அழுத்தத்தை போக்குவதற்க்காக தனது தங்கை லெஸி (Ilezie) யுடன் கேரளாவிற்கு வந்து, கோவலத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளார். அங்கு இருந்து ஆட்டோவில் ஆயுர்வேதிக் சிகிச்சைக்காக செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி சென்றவர் பின் விடுதிக்கு திரும்பாததால், அவரது தங்கை போலீசில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை உதவியுடன் காணாமல் போனவரின் புகைப்படத்தை மக்கள் அதிகம் கூடும் இடத்தில் மொபைல் எண்ணுடன் வைத்துள்ளனர். ஒருமாதமாக தேடி வந்த நிலையில், கடந்த வெள்ளியன்று தலை இல்லாத கிடைத்த சடலத்தை ஆய்வு செய்த போது, இவர் காணாமல் போனவர் என்று உறுதி செய்தனர். இவரின் உடலை அருகில் உள்ள மீனவர்கள் கண்டுபிடித்த போது தலை மற்றும் கால் பகுதி இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு பெரிய அளவில் இல்லை என்பதை சமீபத்தில் நடந்த சிறுமியின் சம்பவத்தில் இருந்து மீளும் முன், இந்த செய்தி மிக பெரிய சோகத்தை உண்டாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பெண்களுக்கு கூட சிறிதளவும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சமூகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் இது போன்ற சம்பவங்களுக்கு சட்டம் கடுமையாக இல்லாமல் போனதே காரணம். இதனால் தான் இன்றளவும் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.