ads

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த மெட்ராஸ் சென்ட்ரல் கோபி சுதாகர்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த மெட்ராஸ் சென்ட்ரல் கோபி சுதாகர் ImageCredit : Twitter @madras_central ‏

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த மெட்ராஸ் சென்ட்ரல் கோபி சுதாகர் ImageCredit : Twitter @madras_central ‏

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, மற்ற சங்கங்களும் போராட்டத்துக்கான ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில், திரை உலகினர், வள்ளுவர் கோட்டத்தில், ஒரு நாள் மௌனப் போராட்டம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று, பாரதிராஜா தலைமையிலான சில இயக்குனர்கள், சாலை மரியல்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் ஈடுபட்டனர்.

இன்று, தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா சங்கம் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகின்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் மெட்ராஸ் சென்ட்ரல் புகழ் கோபி மற்றும் சுதாகர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் ஸ்டெரிலைட் ஆலையை மூட வேண்டுமென்றும் என்றும் கோபி  குரல் கொடுத்தார். மேலும் ஐபில் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் செல்லக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து கோபி பேசுகையில், நடைபயணம் மேற்கொள்ளும் கட்சிகள், இதற்கு முன்பு மத்திய அரசில் அங்கம் வகித்திருந்த போதிலும் காவிரிக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறிவிட்டன என்று திமுகவை மறைமுகமாக சாடினார். மேலும், தண்ணீர் இல்லாமல் போனால் என்ன ஆகுமென்று தெரிந்து கொள்ள இணையதளம் வாயிலாக தென்  ஆப்பிரிக்காவில் உள்ள கேட்பேடவன் என்ற நகரத்தின் தற்போதைய நிலையமையை மக்கள் பார்க்க வேண்டுமென்று மேற்கோள் காட்டினார்.

மேலும், "காவிரி பிரச்னையால் சென்னையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனையாக பார்க்க வேண்டும். காவிரி நீரைத் தரமாட்டேன் என்று கூறும் கர்நாடக மக்களும் அதற்குத் துணை நிற்கும் மத்திய அரசாங்கமும் இதற்கான பலன்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள்", என்று கோபி தன்  ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர், பேச வந்த சுதாகர், "காவேரிக்கான போராட்டங்கள் நாங்கள் சிறு வயது முதலே பார்த்துப்  பழகிய ஒன்று. இன்னும் எத்தனை நாட்கள் நீளும் என்று எவருக்கும் தெரியாது. தண்ணீருக்காக போராடுவது நமது உரிமை மட்டுமல்ல நமது கடமையும் கூட " என்று ஆவேசமாகப் பேசினார். மேலும், தண்ணீரில்லாமல் விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் நிலைமையையும் அதனால் பாதிக்கப்படும் நமது உடல் ஆரோக்யத்தைப் பற்றியும் சுதாகர் எடுத்துரைத்தார்.    

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த மெட்ராஸ் சென்ட்ரல் கோபி சுதாகர்