ads
மகாராஷ்டிரா விவசாயிகளின் பசியை தீர்த்த இஸ்லாமிய சகோதரர்கள்
வேலுசாமி (Author) Published Date : Mar 12, 2018 15:08 ISTஇந்தியா
அகில இந்திய கிஷான் சபா என்ற விவசாய சங்கத்தினர், விவசாயி கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கிட்டத்தட்ட 40 ஆயிரம் விவசாயிகளுடன் கடந்த 5-ஆம் தேதி நாசிக்கில் பேரணியை துவங்கினர். அரசு தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மும்பை சட்டசபையை முற்றுகையிட 180 கிமீ நடைபயணமாக பேரணியை தொடங்கியது.
பயணம் மேற்கொண்ட வழி முழுவதும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் 5 நாட்களில் நேற்று மும்பை வந்தடைந்துள்ளது. இரவு அங்கு தங்கி காலை அசாத் மைதானம் செல்வது விவசாயிகளின் திட்டமாக இருந்தது. ஆனால் அம்மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதால் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இரவே நடைப்பயணத்தை தொடங்கினர்.
பைகுல்லா சந்திப்பை விவசாயிகள் அடைந்த போது அவர்களின் பசிக்காக இஸ்லாமிய சகோதரர்கள் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர். இதற்காக அவர்கள் காலை 4 மணிமுதல் காத்து கொண்டிருந்தனர். சாதி மதத்தை துறந்து 180 கிமீ நடைபயணம் மேற்கொண்டு வரும் விவசாயிகளின் பசியை போக்கிய இஸ்லாமிய சகோதரர்களின் இந்த செயல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது.
தற்போது ஆசாத் மைதானத்தில் சுமார் 75ஆயிரம் விவசாயிகள் ஒன்று திரண்டுள்ளனர். மேலும் ஏராளமான விவசாயிகள் ரயில், பேருந்து மூலமாக வந்து கொண்டிருப்பதாக அகில இந்திய கிசான் சபா தலைவர் தெரிவித்துள்ளார்.