ads

மும்பை கிரிஸ்டல் டவரில் ஏற்ப்பட்ட பயங்கர தீவிபத்து

மும்பையில் கமலா மில்ஸ் தீ விபத்தை தொடர்ந்து அடுத்ததாக கிரிஸ்டல் டவரில் பயங்கர தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது.

மும்பையில் கமலா மில்ஸ் தீ விபத்தை தொடர்ந்து அடுத்ததாக கிரிஸ்டல் டவரில் பயங்கர தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது மும்பையில் ஹிந்த் மாதா சினிமாவிற்கு (Hindmata Cinema) அருகில் உள்ள கிரிஸ்டல் டவரில் (Crystal Tower) பயங்கர தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது. இன்று காலையில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கி கொண்டனர். அதில் சில பொது மக்களை கிறேன் உதவியுடன் மீட்டுள்ளனர். ஆனாலும் ஏராளமான பொது மக்கள் இன்னும் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர்.

உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. தீ பரவிய செய்தி அறிந்து முதலாவதாக 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் தீ தொடர்ந்து பரவி கொண்டே வருவதால் கூடுதலாக 10 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முதலில் கிரிஸ்டல் டவரில் 12வது மாடியில் சிறியதாக ஆரம்பித்த தீ மல மல வென 13, 14 மற்றும் 15வது மாடிக்கும் வெகுவாக பரவியுள்ளது.

தற்போது வரை தீயணைப்பு வீரர்கள் நான்கு பேரை மீட்டுள்ளனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் தீயானது தற்போது இரண்டாம் கட்டத்தில் இருந்து மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் காலை 8:32 மணியளவில் 12வது மாடியில் இருந்து தகவல் அளித்து வருவதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தீ தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் கமலா மில்லில் ஏற்ப்பட்ட தீயினால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 

மும்பை கிரிஸ்டல் டவரில் ஏற்ப்பட்ட பயங்கர தீவிபத்து