ads

தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி

மத்திய சுற்றுசூழல் வாரியம் தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விரைவில் 1500 கோடி செலவில் தொடங்கவுள்ளது.

மத்திய சுற்றுசூழல் வாரியம் தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விரைவில் 1500 கோடி செலவில் தொடங்கவுள்ளது.

தேனீ, பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் என்ற மலையில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1500 கோடி. முன்னதாக இந்த திட்டத்தை ஆரம்பித்த போது அப்பகுதி மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் போன்றவை பாதிக்கப்படாது என மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த செய்தியறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், தமிழ்நாடு சுற்றுசூழல் அமைச்சகம் மற்றும் விலங்குகள் நல வாரியம் போன்றவற்றிடம் முறையான அனுமதி பெற வேண்டும் எனவும், தீ விபத்து, நில அதிர்வு மற்றும் கட்டுமான பணிகள் குறித்த அனுமதியையும் பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் எனவும் பயன்படுத்தப்பட்ட நீரை மறு சுழற்சி செய்து உபயோகப்படுத்துதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் நிர்வாகத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடம் வேதனை அளித்துள்ளது.

இந்த திட்டத்தினால் சுற்றுசூழல் சீர்கேடு, உடல்நல பிரச்சனைகள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில் தற்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை உபயோகப்படுத்த அனுமதி அளித்ததால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பொது மக்கள்.

தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி