ads

நிரந்தர வேலைவாய்ப்புக்காக மும்பையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

நிரந்தர வேலைவாய்ப்பு கோரி மும்பை மாணவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தியதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிரந்தர வேலைவாய்ப்பு கோரி மும்பை மாணவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தியதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை, ரயில்வே துறையில் தேர்வு எழுதி தற்போது பயிற்சியாளர்களாக இருந்து வரும் மாணவர்கள் தங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் சத்ரபதி சிவாஜி டெர்மினல் மற்றும் மட்டுங்கா, தாதர் இடையிலான ரயில் பாதையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில், ரயில் மாறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மும்பை ரயில் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இதர போக்குவரத்தை விட ரயில் சேவையை பெரும்பாலான மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் திடீரென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மட்டுங்கா தாதர் இடையிலான 5 லட்சத்திற்கும் மேலான பயணிகள் தவித்து வருகின்றனர்.

மும்பையில் சத்ரபதி சிவாஜி டெர்மினல் மிகவும் பரபரப்பான மிக முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் 60 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகிறது. மாணவர்கள் போராட்டத்தால் ரயில் சேவை அங்கு முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் வேறு வழியாக செல்லுமாறு ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மாணவர்களை போராட்டத்தை கலைக்க காவல் அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

ஆனால் மாணவர்கள் ரயில்கள் மீது கற்கள் வீசி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல் அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அங்கு போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர வேலைவாய்ப்புக்காக மும்பையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்