ads

பழனி கோவில் சிலை செய்ததில் தங்கத்தை சேர்க்காமல் கோடி கணக்கில் மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது

பத்ம ஸ்ரீ விருது பெற்ற முத்தையா ஸ்தபதி பழனி கோவில் சிலை முறைகேடு வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பத்ம ஸ்ரீ விருது பெற்ற முத்தையா ஸ்தபதி பழனி கோவில் சிலை முறைகேடு வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழனி உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக முத்தையா ஸ்தபதி என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அமைச்சரின் உறவினர் ஒருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பழனி முருகன் கோவில் மூலஸ்தனத்தில் நவபாஷான சிலை சேதமடைந்ததை அடுத்து அந்த சிலை ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 200 கிலோ எடை கொண்ட தங்கம் போன்ற நான்கு வகையான உலோகங்களால் ஆன புதிய சிலையை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் சதி திட்டம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஐம்பொன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்று கோடி கணக்கில் பணம் சம்பாதிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்துள்ளது. சென்னை அருகே கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதிக்கு சொந்தமான சிற்ப கலைக்கூடம் ஒன்று உள்ளது.

இதில் புதிய ஐம்பொன் சிலையை வடிவமைப்பதற்கான பணிகள் முத்தையா ஸ்தபதியின் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த சிலையின் எடை 200 கிலோ. ஆனால் புதிய சிலை வடிவமைத்ததில் 21.08 கிலோ கூடுதலாக அமைந்து 221.08 கிலோவாக இருந்தது. இதனால் சிலை செய்ததில் முறைகேடு இருப்பது தெரியவந்தது. இந்த சிலையை சென்னை ஐஐடி குழுவினர் ஆராய்ச்சி செய்தனர். இதில் 1.31 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் பொன் மாணிக்கவேல், ராஜாராம், சூப்பிரண்டு கருணாகரன் ஆகியோர் நேற்று சென்னையில் முத்தையா ஸ்தபதியை கைது செய்துள்ளனர். கடந்த 14ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த மோசடி தற்போது உறுதி படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அப்போது கோவில் நிர்வாகியாக இருந்த கேகே ராஜா என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பிரபல தமிழக அமைச்சரின் உறவினர் என்று கூறப்படுகிறது. விரைவில் முத்தையா ஸ்தபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பழனி கோவில் சிலை செய்ததில் தங்கத்தை சேர்க்காமல் கோடி கணக்கில் மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது