ads
நெல்லை தீக்குளிப்பு சம்பவம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது பற்றி முகநூலில் விளக்குகிறார் நெல்லை ஆட்சியர்
வேலுசாமி (Author) Published Date : Nov 06, 2017 18:19 ISTஇந்தியா
நெல்லை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த அக்டோபர் 24-இல் இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பமும் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதனை அடுத்து முதலமைச்சர், நெல்லை ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டு கொள்ளாதபடி ஒரு கேலிச்சித்திரம் ஒன்று வரையப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதற்காக கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் "இந்த புகார் குறித்து எனக்கு தகவல் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அனைத்தும் உணர்ச்சியால் சித்தரிக்கப்பட்டு இந்த நடவடிக்கை மறைக்கப்பட்டுள்ளது. அதே போல கார்ட்டூனிஸ்ட் பாலாவும் அரசை எதிர்த்து தவறாக சித்தரித்து உள்ளார். அனைவருக்கும் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது அதை நான் மதிக்கிறேன். ஆனால் உண்மை தெரியாமல் தவறாக சித்தரிக்கப்படுவது தவறு அதனால் தான் அவர் கைது செய்யப்பட்டார். தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தவறு யார் மீது என்று விசாரணையில் தெரிந்துவிடும் நான் இந்த பதவிக்கு உண்மையாக இருக்கிறேன் அப்படி இருக்கும்போது என்மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவது தவறு நான் இதை ஏற்று கொள்ளமாட்டேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.