ads
ofo மிதிவண்டியை அமைச்சர் SP வேலுமணி அவர்கள் RS புரத்தில் அறிமுகப்படுத்தினார்
ராசு (Author) Published Date : Mar 04, 2018 15:38 ISTஇந்தியா
மிதிவண்டி நிறுவனமான ofo கம்பெனி உலகெங்கிலும் மிதிவண்டி பயன்பாட்டை விரிவு படுத்திவருகிறது. இந்தியாவில் ஏற்கனவே சில மாநிலங்களின் முக்கியமான நகரங்களில் செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாடடில் கோயம்பத்தூரில் இரண்டு மாதங்களுக்கு முன்னே PSG மருத்துவ கல்லூரி - மருத்துவமனையில் அறிமுக படுத்தி மக்களிடையே விழிப்புணரவை ஏற்படுத்தினார்கள். கல்லூரி வளகரத்திற்குள் மட்டுமே உபயோக படுத்தமுடியும்.
ofo நிறுவனம் தனது மிதிவண்டி பயன்பாட்டை விரிவு படுத்த தமிழக அமைச்சர் திரு SP வேலுமணி அவர்களின் உதவியுடன் கோயம்பத்தூர் RS புரத்தில் மக்களுக்காக அறிமுகப்படுத்தினார் [03-03-2018], இந்த சேவை மாநிலத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தும் முயற்சி எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். போலீஸ் கமிஷனர் K . பெரியய்யா அவர்களும், மாநகராட்சி கமிஷனர் K . விஜய்கார்த்திகேயன் அவர்களும் உடேன இருந்து, மிதிவண்டியின் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுசூழல் நன்மைகள் மற்றும் ஆரோக்யத்தைப் பற்றி எடுத்துரைத்தனர்.
ofo மிதிவண்டியை பயன்படுத்த ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஸ் மொபைல் அப்ப்ளிகேஷனை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் டவுன்லோட் செய்து, பின் நம் மொபைல் எண் அத்துடன் பதிவு செய்வதன் மூலம், நமக்கு குறியீட்டு எண் கிடைக்கும், அதை வைத்து மிதிவண்டியில் செயல்படுத்தினால், லாக் திறந்துவிடும். நாம் உபயோகப்படுத்தும் நேரம் நமது மொபைலில் கண்காணிக்கப்படும், மற்றும் GPRS உதவி மூலம் நாம் இருக்கும் இடத்தையும் கண்காணிக்க முடியும். நாம் உபயோக படுத்தியபின், மிதிவண்டியை எடுத்த இடத்தில் அல்லது அவர்கள் குறிப்பிடும் இடத்தில நிறுத்தினால் போதும், மிதிவண்டி தானாகவே லாக் ஆகி மற்ற வடிக்கையாளர்க்கு காத்திருக்கும்.
ofo நிறுவதின் இந்த முயற்சி சிறந்தது என்றே கூறலாம். இதன் பயன்பாட்டினால் காற்று மாசு அடையாமலும், போக்குவரத்து நெருக்கம் இல்லாமலும், உடல் ஆரோகியத்திற்கும் உடற்பயிற்சி போல் அமையும்.
ஆண்ட்ராய்ட் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் இங்கு குறிப்பிட்டுள்ள இணையத்தை உபயோகித்து மொபைலில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.Google PlayStore OFO