ads

விஜய் சேதுபதியின் நற்பணி தொடர பா.ம.க தலைவர் ராம்தாஸ் வாழ்த்து

விஜய் சேதுபதியின் நற்பணி தொடர பா.ம.க தலைவர் ராம்தாஸ் வாழ்த்து

விஜய் சேதுபதியின் நற்பணி தொடர பா.ம.க தலைவர் ராம்தாஸ் வாழ்த்து

சினிமா துறையில் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் சிலர் தாங்கள் நடிப்பதன் மூலம் கிடைத்த வருவாயில் சமூக நலனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் ஆதரவற்றோர் மற்றும் வறுமை வாய்ந்த குழந்தைகளை தத்தெடுத்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனியார் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் கிடைத்த வருவாயை அங்கன்வாடி மேம்பாட்டுக்கும், செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் மற்றும் பார்வையற்றோருக்கான பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு 49.7 லட்சத்தை நிதிஉதவியாக வழங்கியுள்ளார். இதனை ஆதரித்து ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையின் சமூக வலைத்தளங்களில் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அரசியல்வாதியான பா.ம.க தலைவர் ராமதாஸ் இதனை ஆதரித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். அதில் " விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூபாய் 50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடி மேம்பாட்டிற்கு விஜய் சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்." என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் நற்பணி தொடர பா.ம.க தலைவர் ராம்தாஸ் வாழ்த்து