ads
வெள்ளத்தால் தவிக்கும் கேரளாவிற்கு பிரதமர் மோடி 500கோடி நிதி அறிவிப்பு
ராசு (Author) Published Date : Aug 18, 2018 12:37 ISTஇந்தியா
கேரளா கனமழையால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு ஏராளமான தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிப்படைந்த கேரளா மக்களை சந்திப்பதற்காக இன்று காலையில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் வந்தார்.
ஆனால் கேரளாவில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக கொச்சிக்கு புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட புறப்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டர் இயங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் கொச்சிக்கு திரும்ப நேரிட்டது.
இதனை அடுத்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கொச்சி ஆளுநர் சதாசிவம் ஆகியோர்களுடன் வெள்ளப்பாதிப்புகள் குறித்து கலந்தாலோசித்தார். அப்போது பிரதமர் மோடி கேரளாவின் நிவாரண பணிக்கு 500 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்துறை மந்திரியான ராஜ்நாத் சிங் அவசர நிவாரண பணிக்காக 100 கோடி அளிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி 500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.