ads
டெல்லியில் பரீக்ஷா பர் சர்ச்சா நிகழ்ச்சியில் பேசிய மோடி
வேலுசாமி (Author) Published Date : Feb 16, 2018 18:16 ISTஇந்தியா
தேர்வின் போது ஏற்படும் குழப்பங்களையும் மாணவர்களுக்கு தீர்ப்பதற்காக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் டெல்லியில் உள்ள டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் ‘பரீக்ஷா பர் சர்ச்சா’ (தேர்வுகள் தொடர்பான விவாதம்) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மனஅழுத்தத்தை எப்படி வெல்வது என்று உரையாற்றியுள்ளார். மேலும் தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என தற்போது தொடர்ந்து உரையாடி வருகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மொழிகளை சார்ந்த மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இதனால் மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். “ மொழி தடை காரணமாக மாணவர்களை தொடர்பு கொள்ள முடியாததற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
ஒரு மொழியை கற்று கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உதாரணத்திற்கு தமிழ். பழமையான மொழி தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது. நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும்” என மோடி மாணவர்களிடையே தெரிவித்துள்ளார்.