ads

தமிழ்த்தேசிய பெரியக்கங்கள் தமிழ் நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் முற்றுகை

தமிழ்த்தேசிய பெரியக்கங்கள் தமிழ் நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் முற்றுகை

தமிழ்த்தேசிய பெரியக்கங்கள் தமிழ் நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் முற்றுகை

பல எதிர்ப்புகளை தண்டி இன்று ஐபிஎல் நிர்வாகம் தனது இரண்டாவது போட்டியை சென்னையில் நடத்த தயாராக இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் சமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடந்த மாதம் மார்ச்சில் இறுதியிலிருந்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தது ஐபிஎல் நிர்வாகம்.

ஆனால் ஐபிஎல் திசை திருப்பும் முயற்சி என்று பல அரசியல் காட்சிகள் சமூக ஆர்வலர்கள் சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை வேறு மாநிலத்திற்கு மற்றும்படி கேட்டுக்கொண்டனர். ஐபிஎல் நிர்வாகம் அதற்க்கு இணைக்காமல் போகவே போராட்டத்தை கையில் எடுத்திருக்கின்றன சில அரசியல் காட்சிகள்.

இன்று சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் போட்டியை காண வருவோர் மைதானத்திற்குள் சென்று தங்களது எதிர்ப்பை காட்டலாம் என்று கருதிய ஐபிஎல் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பார்வையாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. கருப்பு நிற ஆடை அணிந்துகொண்டு ஆட்டத்தை பார்கவருவது, கைபேசி, கணினி, பேனர்கள், பைனாகுலர், கேமரா, போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸிற்கு தமிழ் நாட்டில் இருக்கும் ஆதரவை கணக்கில் கொண்டே இவ்வாறு விதிமுறைகளை விதித்திருப்பதாக பலர் கருதுகின்றனர். 

இதனால் ஐபிஎல் போட்டியை முற்றிலுமாக புறக்கணிக்க தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நாம் தமிழர் கட்சி செயலாளர் சீமான், தமிமுன் அன்சாரி மற்றும் இதர பல தமிழ்த்தேசிய இயக்க தலைவர்கள் அனைவரும் இன்று மாலை தமிழ் நட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட தீர்மானித்துள்ளனர். அவர்களுடன் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ், இயக்குனர், அமீர், தங்கர்பச்சான், சேரன், கௌதமன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்பர் என்றும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை தமிழகத்தில் நடைபெறும் அணைத்து ஐபிஎல் போட்டிகளையும் வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்சிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டம் தமிழக இளைஞர்களை விளையாட்டா வாழ்வாதாரமா என்று முடிவெடுக்கும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

Latest Update:

தமிழ்த்தேசிய காட்சிகள் சேப்பாக்கத்திற்கு பூட்டு போட்டு போராட்டம். கருப்பு பலூன் மற்றும் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி போராட்டம். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்த்தேசிய பெரியக்கங்கள் தமிழ் நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் முற்றுகை