ads
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மூடப்படுமா?
வேலுசாமி (Author) Published Date : Oct 31, 2017 13:12 ISTஇந்தியா
திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இருவருமே மாபெரும் தொழிலதிபர்கள். இவர்கள் இருவருக்குமே கடும் போட்டி நிலவி வருகிறது. முகேஷ் அம்பானியின் ஆர்ஜியோ நிறுவனம் அறிவித்த இலவச சேவைகளால் மக்கள் அனைவரும் ஜியோ விற்காக அதிகமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் வாங்க தொடங்கினர். இதையடுத்து தனது இலவச சேவைக்கான கட்டணத்தை வசூலிக்க தொடங்கினார். தற்போது ரூ.399 -க்கு வழங்கப்பட்ட இலவச சேவை தற்போது ரூ.459 ஆக அதிகதிரித்துள்ளது.
அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் 45,000 கோடி வாங்கிய கடனை இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு எஸ்.பி.ஐ உள்பட கடன் கொடுத்த நிறுவனங்கள் இந்த வருடத்திற்குள் திருப்பி செலுத்துமாறு காலக்கெடு விடுத்துள்ளது. இதனையடுத்து அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மனான அவர் அந்நிறுவனத்திடம் இருந்து இந்த வருடம் சம்பளம் ஏதும் பெறப்போவதில்லை எனவும் ஏர்செல் மற்றும் பிரூக்பீல்டு உடன் இணைவதன் மூலம் 60% வரை கடனை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது சொத்துக்களை விற்பதன் மூலம் கடனை குறைக்கலாம் என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது தீவிரமாக சொத்துக்களை விற்க இறங்கியுள்ளனர். இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று மூடப்படுவதாக சில வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவல்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எந்தவித அறிவிப்பும் இன்றி இந்த மாதிரியான தகவல்கள் வெளியாவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் மூட அதிகபட்ச வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.