ads
பாரத் பந்தால் கலவர பூமியான வட மாநிலங்கள்
ராசு (Author) Published Date : Apr 10, 2018 14:27 ISTஇந்தியா
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஏப்ரல் 2 ஆம் தேதி தலித் அமைப்பினரால் நடந்த பந்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் மேல்குடி மக்கள் குழுக்களால் ஏப்ரல் 10 ஆம் தேதி நாடு தழுவிய பந்திற்கு சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அழிக்கப்பட்டுவிட்டது. பாரத் பந்திற்கு ஆதரவாக இன்று வணிகர்கள் முழு கடையடைப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். கலவரங்களை தடுக்க முக்கியமான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்க ஏப்ரல் 2ஆம் தேதி வட மாநிலங்களில் பாரத் பந்த் நடைபெற்றது. SC/ST (அட்டூழியங்களின் தடுப்பு) சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக தீர்ப்பு அமைந்துள்ளது என்று பெரும்பாலான மாநிலங்களில் தலித் அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்தன.
இது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியதாவது, தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தீர்ப்பைப் பற்றி முழுவதுமாக வாசித்திருக்கக்கூட மாட்டார்கள் என்று பதிலளித்தது. மேலும் மத்திய அரசு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை நிச்சயமாக பாதுகாக்கும் என்றும் தெரிவித்தது.
ஏப்ரல் 2 பாரத் பந்த் போராட்டத்தில் பலர் காயமடைந்தனர். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் பொது மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து வராமல் காக்கவும் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் இன்று 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் , மத்திய பிரதேஷ் தலை நகர் போபால் ஆகியன இதில் குறிப்பிடத்தக்கவை.
இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் பல்வேறு பகுதிகளில் இன்று வன்முறை வெடித்தது. பீகாரின் போஜ்பூர் நகரில் அரங்கேறிய வ்சன்முறையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ரயில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பீகார், உத்தர பிரதேஷ், உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கியமான இடங்களிலும் போலீஸ்காரர்கள் எந்நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6000 காவலர்கள் குவாலியர், சாம்பல் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்னளர். ராஜஸ்தான் மாநிலம் பாரத்ப்பூரில் ஏப்ரல் 15 வரை 144 உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸாப்களில் பகிரும் தகவல்களை கருத்தில் கொண்டு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.