ads
நாளை நடைபெறவுள்ள குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான விதிமுறைகள்
வேலுசாமி (Author) Published Date : Feb 10, 2018 11:40 ISTஇந்தியா
குரூப் - 4 மற்றும் விஏஓவுக்கான நுழைவு தேர்வுகள் நாளை (11-02-2018) தமிழகம் முழுவதும் உள்ள 301 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 20.6 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டின் தேர்வாணைய வரலாற்றில் ஒரே தேர்வில் 20 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்பது இது முதன் முறையாகும். தமிழகம் முழுவதும் மொத்தமாக 20,69,274 மக்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் 1,60,120 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக 685 பறக்கும் படைகள் இந்த தேர்வுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் தேர்வுக்கூடத்தின் பெயர் மற்றும் முகவரிகள் அடங்கிய தகவல்கள் அச்சடிக்க பட்டுள்ளது. இதன் மூலமாக தேர்வு முடிவுகள் வெளியிடும் கால அவகாசமும் குறையும். மேலும் ஏராளமான முறைகேடுகள், தவறுகள் இதன் மூலம் குறைக்கப்படும்.
இந்த முறை நுழைவு சீட்டில் தெரிவித்துள்ள படி தேர்வு எழுதுவோர் வினாத்தாளில் விடையினை குறித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் புதியதாக ஒரு காளம் சேர்க்கப்பட்டுள்ளது. இது தேர்வுத்தாள்களில் விடையை குறிப்பிடாமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் உள்ளது. இதனால் தற்போது தேர்வு நேரத்தில் கூடுதலாக 5 நிமிடம் சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியம் மூலம் மின்வாரியத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்த பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விண்ணப்பதாரர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டுள்ளது. இந்த தேர்வில் புத்தகங்கள், செல்போன், குறிப்பு சீட்டு, இதர உபகரணங்கள் போன்றவை உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடிகாரம், மோதிரம் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை விண்ணப்பதாரர்கள் மீறினால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.