ads

மு க ஸ்டாலின் பேட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும்

மு க ஸ்டாலின் பேட்டி வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும் Imagecredit: Twitter @mkstalin

மு க ஸ்டாலின் பேட்டி வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும் Imagecredit: Twitter @mkstalin

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் உட்பட 8 தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை வெள்ளக்கிழமை மதியம் சந்தித்தனர்.  

ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி, 6 நாட்களாக திருச்சியில் இருந்து கடலூருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த காவிரி உரிமை மீட்புப் பயணம் நிறைவுற்ற பிறகு, இன்று ஆளுநரைச் சந்தித்து, தமிழ்மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுள்ள வாரியம் தொடர்பான விளக்க மனுவைத் திரும்பப் பெற்று, மே 3 ஆம் தேதி வரை பொருத்திராமல், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனு ஒன்றையும்  கொடுத்தனர்.

40 நிமிட சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த மு க ஸ்டாலின் , அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

சமீபத்திய அறிக்கை ஒன்றில்,, வரும் 16 ஆம் தேதி, SC/ST சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு  எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்கள் நடைபெறும் என்று திமுக தெரிவித்துள்ளது. 

மு க ஸ்டாலின் பேட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும்