ads
குமரி கேரளா கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அபாயம்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 14, 2018 07:17 ISTஇந்தியா
திரு எஸ்.பாலச்சந்திரன் வானிலை ஆய்வு இயக்குனர் கூறுகையில், இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரித்தார் மற்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்னரே புயல் எச்சரிக்கை வந்த நிலையில், இன்றளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக வலுவடைந்து உள்ளது. குமரி மாவட்டம் கடலோர பகுதிகள் மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிக்கும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பெய்ய கூடும் என அறிவித்தார்.
தமிழக மீன்வள துறை அமைச்சர் திரு ஜெயகுமார் அவர்களின் சமீபத்திய பேட்டியில், வானிலை அறிக்கையின் அடிப்படையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சிரிக்கை விடுத்துள்ளோம், மற்றும் ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களுக்கும் பாதுகாப்பு துறை மூலம் விமானங்களில் உதவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த பல மீனவர்கள் ஏற்கனவே அருகில் உள்ள கரைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர். தமிழக அரசு பல்வேறு முறையில் மீனவர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும் நேற்று காற்றின் தாக்கத்தால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல் நிறுத்திவைத்தனர்.