ads
பள்ளி ஆண்டு விழாவில் இருட்டை போக்குவதற்கு உபயோக படுத்திய அதிக வெளிச்சத்தினால் வந்த வினை
கோகுல் சரவணன் (Author) Published Date : Mar 18, 2018 10:01 ISTஇந்தியா
திருநெல்வேலி ஏர்வாடியில் உள்ள பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆண்டு விழா கொண்டாடப்பட்டது, இரவு நேரம் என்பதால் இருட்டை போக்குவதற்கு ஒளி விளக்குகள் கட்டுவது வழக்கம். ஆனால் இந்த பள்ளியில் மிக அதிகம் வெளிச்சத்தை கொண்ட விளக்கை கட்டியதால் அங்கு விழாவில் பார்வையாளராக இருந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அவதிக்குள்ளாயினர்.
பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் விசாரித்தபோது, விழாவில் கலந்து கொண்டபோது யாருக்கும் இதன் பாதிப்பு தெரியவில்லை, பகலில் இருப்பதை போல் வெளிச்சமாக இருந்ததாகவும் வீட்டிற்கு சென்ற பின்பு சிறிய அளவில் ஆரம்பித்த கண் எரிச்சல் நேரம் செல்ல செல்ல அதிகமானதுடன் கண்ணில் நீர் வழிந்தது, ஒரு சிலருக்கு வீக்கம் இருந்ததாகவும் கூறினார்.
இந்த செய்தி பெற்றோர் மத்தியில் பரவ, பள்ளியில் விசாரித்ததில் பள்ளி தாளாளர் அவர்களுக்கும் ஒரு சில ஆசிரியர்களுக்கும் கண்பாதிப்பு இருந்துள்ளது. பள்ளி நிர்வாகம் அனைவரையும் அருகில் உள்ள தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகளின் தாக்கத்தால் வந்த பாதிப்பு, பயப்பட தேவை இல்லை. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும், மற்றும் கண் பார்வைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகள் போதுமான விழிப்புணர்வும், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இதற்கு காரணம்.