ads
இனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்
வேலுசாமி (Author) Published Date : May 10, 2018 18:21 ISTஇந்தியா
தமிழகத்தில் பொது மக்களை வழிநடத்தும் போக்குவரத்து அதிகாரிகள், சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதங்களை விதித்து வருகின்றனர். அதாவது சாலை விதிமுறைகளை மீறுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓடுவது போன்ற விதிமுறைகளை மீறும் மக்களுக்கு காவல் அதிகாரிகள் அபராதங்களை விதித்து வந்தனர். இந்த திட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த முறையில் ஏராளமான லஞ்சம் என்ற பெயரில் முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இது போன்ற முறைகேடுகள் குறித்த புகார்களை குறைக்க புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் மக்களிடம் ரொக்கமாக பணத்தை வாங்காமல் ஸ்வைப் மிசின் மூலம் பணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அறிமுக படுத்தும் நிகழ்ச்சி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த விழாவில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஸ்வைப் மிசின் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் அபராதத்தை செலுத்துவோர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாகவும் அபராதத்தை செலுத்தலாம். இது தவிர அஞ்சல் நிலையம் வழியாகவும் நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்தலாம். இந்த அபராத நடவடிக்கை, மக்கள் வாகன எண்ணை காட்டி அபராதத்தை செலுத்தி விட்டு ரசீது பெற வேண்டும். இந்த ரசீதினை போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தவுடன் அபராத நடவடிக்கை நிறைவடையும்.
இந்த திட்டம் குறித்து கமிஷனர் அருண் அவர்கள் கூறுகையில் "கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஸ்பாட் பைன் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த திட்டம் நிறைவடைகிறது. முன்னதாக போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்த பிறகு அபராதத்தை செலுத்த நீதிமன்றத்தில் மூன்று நாட்கள் அலைய வேண்டும். இதனால் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இனிமேல் போக்குவரத்து அதிகாரிகள் ரொக்கமாக மக்களிடம் பணத்தை வாங்கினால் அது லஞ்சம் என்று கருதப்படும். மீறி பணத்தை வாங்கினால் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.