ads

ஹிந்தியை தவிர்த்து நமது தாய்மொழி தமிழை கவுரவப்படுத்திய ஜப்பான்

ஜப்பானில் நமது தாய்மொழியில் இந்திய கொடியுடன் அறிவிப்பு பலகைகள் அறிமுகமாகியுள்ளது.

ஜப்பானில் நமது தாய்மொழியில் இந்திய கொடியுடன் அறிவிப்பு பலகைகள் அறிமுகமாகியுள்ளது.

வெளிநாடுகளில் குடிபெயர்தலில் பெரும்பாலும் அதிகமாக இந்தியர்களாக காணப்படுகின்றனர். இதனால் தற்போது சீனா, அமேரிக்கா, கனடா போன்ற பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். நமது திறமைக்கு வெளிநாடுகளில் தனி சிறப்பு உள்ளது போல் நம் தாய்மொழியான தமிழுக்கும் தனி சிறப்பு உள்ளது. உலகின் மிக பழமையான மொழிகளுள் முதன்மையானதாக விளங்குவது நமது தாய்மொழி தமிழ். ஆனால் தற்போது தமிழுக்கு தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் வேற எந்த மாநிலத்திலும் மதிப்பு இருப்பதில்லை.ஏன் தமிழ்நாட்டிலே தமிழில் பேசுவதை அருவெறுப்பாக நினைக்கும் அளவிற்கு மோசமானதாக மாறிவிட்டது நமது தாய்மொழி.

ஆனால் 300 BC காலத்தில் இருந்தே தோன்றியதாக கருதப்படும் தமிழ் மொழிக்கு வெளிநாடுகளில் அதிகப்படியான மதிப்புகள் இருந்து வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நகரங்கள் தமிழ் நாடாகவே மாறி விட்டது. இது தவிர தமிழ் மொழியை கற்பதற்கு ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், தன்னார்வலர்களும் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் வருகை புரிகின்றனர். இப்படி மிகவும் சிறப்புற்று விளங்கும் தமிழ் மொழியை மறைக்கும் செயல்கள் நடைபெற்று வருகிறது.

இதுவரை இந்தி என்ற ஒரு வார்த்தை தமிழ்நாட்டில் இல்லாத போது பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு, தமிழ்நாட்டில் ஹிந்தியில் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. மேலும் தற்போது பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய 10, 50, 200, 500, 2000 ரூபாய் புதிய நோட்டுகளிலும் தமிழுக்கு 13வது இடமே கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிவரும் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டில் நிலைப்படுத்த முடியாமல் போனதே அதற்கு காரணம்.

இப்படி இந்தியாவிலே தமிழ் மொழிக்கு இருக்கும் மதிப்புகள் குறைந்து வரும் போது வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான ஜப்பான் தமிழ் மொழியை சிறப்பித்துள்ளது. ஜப்பானில் வரும் 2020 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஜப்பான் அதிகம் பார்வையாளர்கள் வரும் 10 நாடுகளை வரிசைபடுத்தி அந்நாட்டின் மொழியிலே அறிவிப்புகள் காணப்படும். இந்த வரிசையில் 10 வது இடத்தில் சிங்கப்பூரும், 9வது இடத்தில் மலேசியாவும் உள்ளது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இடம்பிடிக்காவிட்டாலும் இந்தியாவுக்கென அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய கொடியையும் அருகில் நமது தாய் மொழியான தமிழிலும் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது டோக்கியோவில் உள்ள சின்-ஊகுப்பு (Shin-ookubo) என்ற ரயில் நிலையத்தில் அறிவித்துள்ளது. என்னதான் பிரதமர் மோடி ஊர் ஊராக சுற்றினாலும் பெரும்பாலும் வெளிநாடுகளில் இந்தியா என்றாலே தமிழ் மொழியை தான் அதிகமாக நினைவில் வைத்துள்ளனர். இதற்கு சான்றாகவே தமிழ் மொழியை ஜப்பான் கவுரவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற இடங்களில் வாழ்ந்து வரும் தமிழ் வாழ் மக்களை பெருமிதப்படுத்தியுள்ளது. இது அவர்களுக்கு மட்டுமில்லை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமை தான். தற்போது இந்த ரயில் நிலையத்தில் மட்டுமே அறிவித்துள்ளது. விரைவில் ஜப்பான் நாடு முழுவதிலும் தமிழில் அறிவிப்புகள் காணப்பட உள்ளது. மேலும் தற்போது சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு ஜப்பான் வாழ் தமிழ் மக்களை கவுரவிக்கும் விதமாக தமிழில் இந்த அறிவிப்புகள் வெளியானது ஒட்டுமொத்த தமிழின மக்களுமே பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

 

ஹிந்தியை தவிர்த்து நமது தாய்மொழி தமிழை கவுரவப்படுத்திய ஜப்பான்