ads

நிலத்தடிநீரை உறிஞ்சுவதில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம்

இந்தியாவிலே தமிழகம் தான் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறது. இதனால் விரைவில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலே தமிழகம் தான் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறது. இதனால் விரைவில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் குறித்த மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பஞ்சாபும், மூன்றாவது இடத்தில் ஆந்திராவும் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 37455 தொழிற்சாலைகள் துணிவகைகள், வாகன உதிரிகள், தோல் பத்தினிடுதல் போன்று பல வகைகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலைகள் பருவ காலங்கள் பாராது ஒரு நாளைக்கு டன் கணக்கில் நிலத்தடி நீரை உபயோகப்படுத்தி வருகின்றன. இதனால் மழை காலங்களிலும் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போது மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீர் வறண்டு போகும் முன்பு மழைநீரை சேமிக்கும் திட்டங்களை விரைவில் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டில் 60 சதவீத மாநிலங்களும் நிலத்தடி நீரை அதிகமாக உபயோகித்து வருகிறது.

நாட்டில் பெரும்பாலும் மக்கள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். இதனால் பருவ காலங்கள் வருவதற்கு முன்பு கிணறுகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு செய்தது. கடந்த 2006முதல் 2016 வரை 526 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்துள்ளது. இதில் 77 சதவீத கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் 13 சதவீத கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

தற்போது ஆண்டுக்கு கிடைக்கும் மழைஅளவை விட நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவு அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் வற்று போகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க எப்போதாவது பெய்யும் மழைநீரை வீணடிக்காமல் சேமித்து வைக்க வழிவகை செய்ய வேண்டுமென நிலத்தடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

நிலத்தடிநீரை உறிஞ்சுவதில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம்