ads

இன்று முதல் அமலுக்கு வந்தது பேருந்து கட்டண உயர்வு

bus fare hike in tamil nadu 2018

bus fare hike in tamil nadu 2018

தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 22,509 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர தனியார் பேருந்துகளும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் சாதரண மக்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 2 கோடி மக்களை நாள்தோறும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வரும் சனிக்கிழமை முதல் புதிய பேருந்து கட்டணம் அமல் படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் புதிய பேருந்து கட்டணம் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

அமல்படுத்தப்பட்ட இந்த பேருந்து கட்டண உயர்வால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சாதாரண மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பேருந்து கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு போராட்டத்தை தொடர்ந்து தற்போது இந்த பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் "தமிழக அரசு பேருந்துகளில் 22 ஆயிரத்து 509 பேருந்துகள் மற்றும் 1,40,615 போக்குவரத்து பணியாளர்களை கொண்டு மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் காடு, மலை பாராமல் அனைத்து பகுதிகளிலும் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 88.64 லட்சம் கோடி தூரம் வரை இயக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக சுமார் 2 கோடி மக்கள் பயனடைகின்றனர். எண்ணெய் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதாலும், உதிரி பாகங்களின் விலை உயர்வு, புதிய பேருந்துகளின் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதியம், பராமரிப்பு செலவுகள், ஊதிய உயர்வு, சட்டரீதியான பணப்பயன்கள் மற்றும் இதர செலவுகள் போன்றவை அதிகரித்துள்ளதால் அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 18-11-2011 ஆம் தேதி ரூபாய் 43.10 க்கு இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது 65.83 ரூபாய்க்கு சுமார் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பேருந்துகளின் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது." என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

bus fare hike in tamil nadu 2018bus fare hike in tamil nadu 2018

இன்று முதல் அமலுக்கு வந்தது பேருந்து கட்டண உயர்வு