ads

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தற்போது மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தற்போது மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் இயங்கி வரும் வேதாந்தா ரெசோர்ஸின் 'ஸ்டெர்லைட் ஆலை' தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் இயங்கி வருகிறது. இந்த ஆலையானது செம்பு கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பரம் அமிலம் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்த உருவாக்கப்படும் செம்பு கம்பிகள் மின்சாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு உபயோகப்படுத்த படுகிறது.

ஆனால் செம்பு கம்பிகள் உருவாக்கப்படும் பொது உருவாகும் கந்தக டை ஆக்ஸைடு சுற்றுசூழல் சீர்கேட்டையும், அப்பகுதியில் வாழ்ந்துள்ள பொது மக்களுக்கும் உயிரினங்களுக்கும், மூச்சு திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தி வந்தது. இந்த ஆலையில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளாலும், வெளியிடும் நச்சு தன்மை உடைய வாயுவினாலும் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் நச்சு வாயு கசிவினால் தமிழக அரசு இந்த ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம், இந்த ஆலையால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்பதால் இந்த ஆலையை மூடுவது சரியல்ல, இந்த ஆலையினால் ஏற்படும் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த ஆலையை இயங்க அனுமதி அளித்தது. இதனை அடுத்து தொடர்ந்து நிலத்தடி நீரை மாசுபடுத்தியும், சுற்றுசூழல் சீர்கேட்டையும் 24 மணிநேர சேவையாக செய்து வந்த இந்நிறுவனம் தற்போது 600 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கு அரசாங்கம் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் கல்நெஞ்ச தனமாக அனுமதி அளித்துள்ளது. இதனை பொறுக்க முடியாமையால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "காப்பர் உனக்கு..கேன்சர் எனக்கா.." என்று முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது இந்த போராட்டம் தீவிரமடைந்து கடந்த 24-ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் காவல் அதிகாரிகளும், அரசாங்கமும் திணறி போனது. தற்போது பொது மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக பல சமூக ஆர்வலர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று இந்த போராட்டமும் தற்போது மாணவர்கள் களமிறங்கியதால் தீவிரமடைந்துள்ளது. ஆனால் இந்த போராட்டத்திற்கு சினிமா பிரபலங்கள் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பொது மக்களின் நியாயமான கோரிக்கைக்காக ஒரு பிரபலங்கள் ஒருத்தன் கூட களமிறங்க வில்லை.

ஏற்கனவே அதிகரித்து வரும் தொழிற்சாலைகளால் சுற்றுசூழல் சுகாதாரம், நீர் வாழ்வாதாரம், விவசாயம் போன்றவை அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. நாளுக்கு நாள் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தொழிற்சாலைகளால் பொது மக்களுக்கு ஏற்படும் அபாயங்கள் எண்ணில் அடங்காதவை.

இதனை அறிந்தும் அனைத்து மக்களும் சகித்து கொண்டு தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது மக்கள் தொழிற்சாலைக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மக்களை மக்களே தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மூடுவதற்கு ஒன்றை மட்டும் எதிர்த்தால் போதாது. அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்