ads

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவக் குழு, கொரோனா தொத்து பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டு போவதால், ஏப்ரல் 14ஆம் தேதி வரை இருக்கும் ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த மருத்துவ குழு செய்தியாளர் சந்திப்பில் கூறியது, தமிழக அரசு கொரோனாவை எதிர்கொள்ளும் முறை சிறப்பாக இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா பாதிப்பு அதிகம் ஆனால் பிற்காலத்தில் இதை கட்டுப்படுத்த மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும். 

இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்களை சோதிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு சோதித்த பின்தான் நாம் ஊரடங்கை நிறுத்தும் முடிவு நல்லதாக இருக்கும், என தமிழகத்தின் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்கள்.

தமிழகத்தில் நாளை நடக்க இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதை விவாதித்து பின் ஒருமுடிவுக்கு வரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை