ads
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வேலுசாமி (Author) Published Date : Oct 31, 2017 13:05 ISTஇந்தியா
தமிழகத்தில் பலத்த மழை காரணமாக தமிழகத்திலுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று முதல் நவம்பர் மாதம் வரை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்த சென்னையில் நேற்று முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் சென்னையில் உள்ள குடும்ப வாசிகளுக்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மழையால் தத்தளிக்கிறது. இது மேலும் தீவிரமடைந்தால் சென்னையில் வெள்ளம் வருவதற்கு பெருமளவு வாய்ப்புள்ளதாக அம்மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை ஆட்சியர் "சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இன்று(30.10.2017) காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் பலத்த மழை நீடிக்கவுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், பள்ளி மாணவர்கள் நலன் கருதி நாளை(31.10.2017) சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது" என ஆட்சியர் அன்புச்செல்வன் நேற்று அறிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் அவசர கால மீட்பு உதவிக்குழு 1913 என்ற எண்ணிற்கும் மேலும் இதர எண்கள் 044-25367823, 044-25384965, 044-25383694 மேலும் வாட்ஸப் எண்களான 9445477662, 9445477205 என்ற எண்களையும் அறிவித்துள்ளது.